2021 மார்கழி மாத ராசிப்பலன்: ராஜயோகப் பலன்கள் பெறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

horoscope spiritual
By Kishanthini Dec 16, 2021 05:36 AM GMT
Report
323 Shares
Courtesy: samayam

சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலம் மார்கழி மாதம் என அழைக்கப்படுகிறது.

2021 டிசம்பர் 16ம் தேதி முதல் 2022 ஜனவரி 14ம் தேதி வரை சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். சூரியனின் சஞ்சாரம் மற்றும் அவர் ஒவ்வொரு ராசிக்கு தரக்கூடிய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

மாணவர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். மேல்படிப்பு படிக்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உங்கள் உடல் நலம் மற்றும் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு அல்லது வெளியூரிலிருந்து மாறுதல், பயணம் உள்ளிட்ட இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமானதாக அனுகூல பலன்களைத் தரும். மார்கழியில் முதல் 10 நாட்கள் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குறிப்பாக நிதி மேலாண்மை அவசியம். வீண் செலவுகள் தவிர்க்கவும்.

இந்த மாதத்தில் உங்களின் முயற்சிகளுக்கு சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம் என்பதால் உங்கள் உழைப்பையும், முயற்சிகளையும் கைவிடாமல் செயல்படவும். இந்த மாதம் சிறப்பான மாதமாக மேஷ ராசிக்கு அமையும் என்பதோடு, சில கெட்ட விஷயங்கள் நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என நகரக்கூடிய மனநிலையுடன் இருப்பது அவசியம். வினைதீர்க்கக்கூடிய விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு மார்கழி மாதம் அஷ்டமாதி மாதமாக அமைவதால் அவ்வளவு சிறப்பானது கிடையாது என்பார்கள். உங்களின் நிதி நிலை சில பின்னடைவு, தேவையற்ற வீண் விரயம், நீங்கள் நம்பியோர் சரியான வகையில் உதவாமல் போகுதல், வேலை, குடும்ப நிமித்தமாக மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடியதாக அமையலாம். நீங்கள் நம்பியவர்களே உங்களுக்கு உதவாத, எதிராக செயல்படக்கூடிய நிலை இருக்கும்.

மார்கழி மாதத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுதல், எதிர்பாராத விஷயங்கள் திடீரென நிறைவேறுதல் போன்ற நற்பலன்கள் ஏற்பட்டாலும், பெரியளவில் முதலீடு செய்வது, அதாவது வீடு, மனை, நிலம் வாங்குதல், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைப்பது நல்லது. முருகன் வழிபாடு உங்களுக்கு அற்புத பலனைத் தருவதாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு அற்புதமான மாதமாக அமையும். கூட்டுத் தொழில் கூட்டு வியாபாரம் செய்ய நினைப்பவர்கள், பங்காளிகளின் ஆதரவு, ஒருவரின் உதவி இருந்தால் தான் ஒரு வேலை செய்து முடிக்க முடியும் என்ற நிலை இருந்தால் அப்படிப்பட்ட வேலைகள் சிறப்பாக முடியும். பிறர் மூலமாக அனுகூலம், காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் நிறைந்த மாதமாக அமையும்.

குழந்தை வரம் கிடைப்பதற்கான மிகவும் அனுகூலமான மாதமாக அமையும். மார்கழி மாதம் முதல் பத்து நாட்கள் பெரியளவில் காரிய சித்தி ஏற்படாத நிலை இருந்தாலும், அதன் பின்னர் மிகவும் சாதகமான பலன்களைப் பெற வாய்ப்புகள் உண்டாகும். ஒப்பந்த வேலை செய்யக்கூடியவர்களுக்கு நினைத்தபடி வேலைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டு வர எண்ணங்கள் நிறைவேறும்.

கடகம்

சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசி நேயர்களே, நீங்கள் எதிர்பார்த்தபடி, நினைத்தபடி சிறப்பான மாதமாக அமையும். அதாவது வேலை, தொழில் சார்ந்து நீங்கள் நினைத்த இலக்கை அடைதல், லாபத்தைப் பெற நல்ல வாய்ப்புகள் அமையும்.

வேலையில் மாற்றம், முன்னேற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அமையும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிரிந்து வாழக்கூடிய தம்பதியர், பிரச்னையை பேசித் தீர்ப்பதன் மூலம் சேர வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.

நிதி விஷயங்களில் கவனம் தேவை. குறிப்பாக நீங்களின் கடன் வாங்கியிருந்தால், அதை அடைக்க மற்றொரு கடன் வாங்குவதை தவிர்ப்பது அவசியம். மற்றவர்களுக்காக ஜாமின் கையெழுத்திடும் முன்னர் நீங்கள் ஆதரிப்பவர் தவறு செய்துள்ளாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டு நிதானமாக முடிவெடுப்பது அவசியம். பெண் தெய்வ வழிபாடு சிறப்பான பலனைத் தரக்கூடும்.

சிம்மம்

சிம்ம ராசி அதிபதியான சூரிய பகவான், ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அற்புதமான காலமாக இந்த மார்கழி மாதம் அமையும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல லாபமும், முன்னேற்றமும் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

உங்களுக்கு பிடித்த மற்றும் பெரியோர்கள் உங்களிடம் அன்பாக பேசினாலும் அது மனதைப் புண்படுத்துவது போல உணருவீர்கள். இருப்பினும் அவர்கள் சொன்னதை நினைத்துப் பார்த்தால் அவர்களின் அக்கறை அதில் இருப்பதை உணர்வீர்கள்.

தொழில், உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதம். உணர்ச்சி வேகத்தில் வேலையை விடுவது, புதிய வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் வேலையை விடுதல் வேண்டாம். புதிய வேலை கிடைத்த பின்னர் வேலையை விடுவது நல்லது.

விஷேச இடங்கள் அல்லது வீட்டில் நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மன மகிழ்ச்சியைப் பெறக்கூடிய வாய்ப்புகள் அமையும். பிள்ளை வரம் வேண்டி வழிபாடு செய்பவர்களுக்கு அதற்கான பலன் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும். சுப காரியத்திற்கான முயற்சியில் இருந்த தடைகள் நீங்கி வீட்டில் சுப காரியம் நடத்துவதற்கான பேச்சுக்கள் சாதகமானதாக இருக்கும்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிக ரீதியான செயல்பாடுகள் வெற்றியைத் தரும். வீட்டில் ஹோமம் செய்ய திட்டமிட்டிருந்தால் சிறப்பாக நடக்கும். குல தெய்வ வழிபாடு, ஸ்ரீ ராமர் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்கு 4ம் இடமான தாய், சுகம், வாகனம், கல்வி, நிலபுலம் போன்றவற்றை குறிக்கக்கூடிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதமாக இந்த மார்கழி மாதம் அமைகிறது.

இந்த மாதத்தில் வீடு, மனை, நிலம், வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். உத்தியோகத்திற்கு தேவையான மற்றும் தொழிலுக்குத் தேவையான புதிய கருவிகள், பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணமும், வாங்கி மகிழக்கூடிய மாதமாக இருக்கும்.

எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். நீங்கள் செய்யக்கூடிய முதலீடு சிறப்பானதாகவும், எதிர்காலத்தில் கைகொடுக்கக்கூடியதாக இருக்கும். இருப்பினும் கடன் வாங்கி முதலீடு அல்லது பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தாயின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். மற்றவர்களை நம்புவதும், ஆதரிப்பதில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவும். அம்மன் வழிபாடு செய்வது சிறந்தது. 

 துலாம்

துலாம் ராசிக்கு 3இம் இடமான இளைய சகோதரர், வீரியம், எழுத்தறிவு, விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களைக் குறிக்கக்கூடிய இடத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ உள்ளது. இந்த மாதத்தில் உங்களுக்கு சிறப்பான மற்றும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடியதான இரண்டும் கலந்த பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் அல்லது பணியிடத்தில் உங்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.

ஆனால் உடனே அவர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கி ஒன்று சேருவீர்கள். அதே சமயம் உங்களுக்கு ஆதரவானவராக இருப்பது போல சிலர் இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு எதிரான விஷயங்களை செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதனால் பேச்சு செயலில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மார்கழி மாதத்தில் இதையெல்லாம் யாரும் மறந்தும் செய்து விடாதீர்கள்! குடும்பம் அல்லது வேலை ரீதியான சரியான முடிவை எடுக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை உண்டாகும்.

அவர்களுக்கு நீங்களும் சில ஆதரவான விஷயங்களை செய்வீர்கள். தொழில் செய்யக்கூடியவர்களுக்குச் சாதகமான காலமாக இருக்கும். குறிப்பாக இந்த மாதத்தில் வீண் பேச்சு, மற்றவர்களை குறை சொல்லுதல், கேலி செய்தல் போன்ற விஷயங்களை கட்டாயம் தவிர்க்கவும். அனுமன், உக்கிரமான அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய சூரியன் மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்பு உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் மார்கழி மாதத்தில் பல வழிகளில் யோகமான பலன்களைப் பெற்றிட முடியும்.

இதுவரை கடின முயற்சி செய்து பெரியளவில் வெற்றியோ, நற்பலனோ கிடைக்கவில்லை என்ற நிலை மாறி உங்களின் முயற்சிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

கட்டுமானம், இரும்பு, போக்குவரத்து, ஆபரண செய்தல், விற்றல் போன்ற தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான மாதமாக அமையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள், உத்தியோகத்தில் புதிய திட்டங்களை முயற்சி செய்தல் போன்ற விஷயங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்களுக்குச் சாதகமான சூழல் நிலவும். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். சேமிப்பு பெருகும். சுப காரியத்திற்கான முயற்சிகளை வெற்றி அடையும். நீங்கள் ஐயப்ப வழிபாடு செய்வது நல்லது.

தனுசு

தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். பணம், தேவைகளை விட மதிப்பு மரியாதை வேண்டும் என நினைப்பீர்கள். திட்டமிட்ட பயணங்கள் மாற வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பாராத வகையில் சில முக்கிய நபர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

உங்களின் ஆளுமை அதிகரிக்கும். பணிச்சுமையைச் சிறப்பாக கையாளுவீர்கள். அரசு மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்களின் தைரியம், நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுமன் வழிபாடு செய்து வருவது நல்லது.

மகரம்

மகர ராசிக்கு சூரியன் விரய ஸ்தானமான 12ல் அமர்ந்தாலும் அது சுப விரயமாகக்கூடிய நல்ல மாதமாக அமையும். பிள்ளைகளின் படிப்புக்கான கட்டணம், வீட்டு தேவைகளுக்காக செலவழித்தல், வீடு, மனை வாங்குதல் போன்ற சுப விரயங்களாக மாற வாய்ப்புள்ளது.

விரய செலவை பயனுள்ள செலவாக மாற்றிக் கொள்வது நல்லது. சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.உங்களின் தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

வீட்டில் மன நிறைவான நிகழ்வுகள் நடக்கும். நீங்கள் அடையாது என நினைத்த இலக்கை அடைவீர்கள். தொலைந்த பொருட்கள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்துவர வாழ்க்கை வசந்தமாகும். 

கும்பம்

கும்ப ராசிக்கு 11ம் வீடான மூத்த சகோதரன், லாபம், மாரகம் இவைகளை உணர்த்தக்கூடிய ஸ்தானம். உங்களின் குடும்பத்தில் மூத்த சகோதர, சகோதரிகள் வழியில் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்.

நீங்கள் அவர்களுக்கு வேண்டிய சில விஷயங்களை செய்து தருவீர்கள். மூத்த சகோதரர் அல்லது வீட்டின் பெரியோர் வகையில் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நல்ல ஆலோசனை கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

இதுவரை நேர விரயம் செய்துவந்த நீங்கள் இப்போது, சரியான திட்டமிடுதலால் வேலைகளை சிறப்பாக செய்து நேரத்தை பயன்படுத்திக்கொள்வீர்கள். உங்களுக்கு பல வகையில் லாபம் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கக்கூடிய வாய்ப்புள்ளது. வயது மூத்தவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணபதியை வழிபட்டு வர சங்கடங்கள் தீரும்.

 மீனம்

வீட்டில் சுப காரியங்கள் நிகழ்வதற்கான அற்புத வாய்ப்புகள் அமையும். தடைப்பட்டு வந்த காரியங்கள், வர வேண்டிய பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

நான் வெற்றிபெற்றே தீருவேன் என்ற எண்ணமும், தைரியம், நம்பிக்கையோடு எந்த ஒரு செயலையும் அணுகுவீர்கள். மார்கழி மாதத்தில் இதையெல்லாம் யாரும் மறந்தும் செய்து விடாதீர்கள்! பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

அவர்கள் மூலம் காரியத்தைச் சாதித்துக் கொள்வது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும். குல தெய்வம், முருகன் கோயில் வழிபாடு செய்து வருவது நல்லது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US