சுவிட்சர்லாந்தில் 2022ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் மரணம்: நிலவும் மர்மம்
சுவிட்சர்லாந்தில் 2022ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்துள்ள விடயம் நிபுணர்களை குழப்பமடையச் செய்துள்ளது.
அதற்குக் காரணம் கோவிட் அல்ல.
சுவிட்சர்லாந்தில், 2022ஆம் ஆண்டில், எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பெடரல் புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
கோவிடால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு, இதயம் பலவீனமாக ஆனவர்களுக்கு கோடை வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பு இந்த மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார் தொற்றுநோயியல் நிபுணரான Martin Röösli,
அத்துடன், மருத்துவமனைகள் அதிக அழுத்தத்திற்குள்ளானதால், பாதிக்கப்பட்டவர்கள் சரியாக கவனிக்கப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இத்தனை மரணங்கள் நடந்ததன் காரணம் மர்மமாக நீடிக்கும் நிலையில், அது குறித்து ஆராய இருப்பதாக சுவிஸ் பெடரல் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதன் முடிவுகள் வெளியாக ஓராண்டுக்கும் மேல் ஆகலாம்.