உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வரும்? மாணவர்களின் குமுறல்! (வீடியோ)
இலங்கையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் ஒரு சில காரணங்களால் தங்களது கல்வி படிப்பை இடைநிறுத்தி விட்டு வேறு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.
இதற்கான என்னவென்று ஆராய்ந்து இலங்கை அரசாங்கம் இன்று வரை ஒரு முடிவை எடுக்கவில்லை. இந்நிலையில் பெப்ரவரி மாதம் எழுதப்பட்ட கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் வெளியிப்படவில்லை.
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தாமதாமாகுவது ஏன்?
இந்த ஆண்டு ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரை நடைபெற்ற பரீட்சையில் 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் என மொத்தமாக சுமார் 331,709 பேர் பரீட்சைக்கு தோன்றினர்.
இந்த பரீட்சையானது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற வேண்டிய பரீட்சையாகும். இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார தாக்கம் குறித்து பரீட்சையின் திகதிகள் மாற்றப்பட்டு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
7 மாதங்கள் கடந்தும் இன்னும் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு பணிகள் தாமதமாகி, மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று வரை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவில்லை என்பதால் அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிரமத்தில் இருகின்றனர்.
பெறுபேறுகள் இன்று வெளியாகும் நாளை வெளியாகும் என்று ஒரு மாதக்காலமாக தாமதித்துக்கொண்டே இருகின்றது இலங்கை பரீட்சை திணைக்களம்.
நேற்றைய தினம் செப்டெம்பா் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந் குமார் தெரிவித்துள்ளாா்.
இதனால் பாதித்துக்கொண்டு இருப்பது பரீட்சை எழுதிய மாணவர்கள் மாத்திரமே.
அந்தவகையில் பரீட்சை எழுதிய ஒரு சில மாணவர்களிடம் கருத்துக்கேட்டப்போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |