பிறக்கவிருக்கும் ஆடி மாதம்; ராசிபலன்கள் இதோ, இந்த தானத்தை செய்தால் மட்டுமே போதும்
ஒரு வருடத்தில் உள்ள மாதங்களிலேயே சிறப்பு பெற்ற மாதமாக ஆடி மாதம் விளங்குகின்றது. ஆடி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது எல்லாம் அம்மனின் சிறப்புகள் தான்.
ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம்.
மேலும் அம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பணசாமி உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் மாதமாக இருகின்றது எனலாம்.
ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
ஆடி பிறப்பு
ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு திதி, நட்சத்திரம் தான் சிறப்பாக இருக்கும். ஆனால் திதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பாக இருப்பது இந்த ஆடி மாதத்தில் தான்.
ஆடி பிறப்பு, ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, ஆடி தபசு, ஆடி பூரம் என ஆடி மாதம் முழுவதும் பக்தியால் பக்தர்கள் நிரம்பி இருப்பார்கள்.
இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த ஆடி பிறப்பானது 2023 ஆம் ஆண்டு ஜூலை 17 ம் திகதி திங்கட்கிழமை பிறக்கிறது. அதாவது ஜூலை 17 ம் திகதி தொடங்கி, ஆகஸ்ட் 17 ம் திகதி வரை ஆடி மாதம் இருக்கும்.
ஆடி மாதத்தின் முதல் நாள் வீட்டில் செய்யும் பூஜை
-
காலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து, கோலமிட வேண்டும்.
- சுவாமி படங்களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
- வாசலில் மாவிலை, வேப்பிலையால் தோரணம் கட்ட வேண்டும்.
- அம்மனை வீட்டிற்கு வரவேற்கும் விதமாக சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் புது வஸ்திரம் வாங்கி ஒரு தட்டில் வைத்து, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம், தாலி சரடு, வளையல் போன்ற மங்கள பொருட்களை வைத்து அம்மனை வழிபட வேண்டும்.
இந்த மாதத்தில் கிடைக்கும் சிறப்பானது ஒவ்வொரு ராசியினருக்கும் நல்ல பலன்களையும் மந்தமான பலன்களையும் தரும்.
ஆகவே எந்த ராசியினருக்கு ஆடி சிறப்பாக இருக்க போகின்றது மற்றும் எந்த தானத்தை செய்து இந்த மாதத்தில் சிறப்பாக வாழ முடியும் என்று இந்த வீடியோவில் தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |