நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது..!உலகக் கோப்பை அணியில் இல்லாதது குறித்து சாஹல் கருத்து
நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது என உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளது.
மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இந்திய அணி அறிவித்த 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சாஹல் கருத்து
அதில் மூன்றாவது முறையாக உலக கோப்பை அணியில் நான் இல்லை, இது எனக்கு பழகிவிட்டது, அதில் இருந்து நான் கடந்து வந்துவிட்டேன்.
இந்திய அணியில் இடம்பெறாதது சிறிது வருத்தம் தான், ஆனால் அணியில் 15 பேர் மட்டுமே இடம்பெற முடியும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது இங்கிலாந்தில் கென்ட் கவுண்டி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறேன், எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும், அது நடந்தால் போதும். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவது குறித்து எனது கவனத்தை முன்வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |