உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2024 உயர்தர (A/L) பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 20, 2024 வரை தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளது.
பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த போதிலும், 2024 மார்ச்சில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து முன் தயாரிப்புகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 சாதாரண தர (O/L) பரீட்சை உட்பட ஏனைய பரீட்சைகளுடன் பரீட்சை அட்டவணை கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், A/L பரீட்சை திகதிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பரந்த பரீட்சை நாட்காட்டியை சீர்குலைக்கும் எனவும் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |