இலங்கை பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை இடைநிறுத்த வேண்டும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதியன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளனது.
குறித்த பரீட்சையானது 6 ஆம் திகதியில் இருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் உள்ளிட்டவையை இடைநிறுத்துமாறு என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விதியை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |