ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரான்சுக்கு முதல் தங்கப் பதக்கமும் முதல் சறுக்கலும்
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரான்ஸ் நாட்டுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது அந்நாட்டு ரக்பி அணி.
முதல் தங்கப் பதக்கம்
பிரான்ஸ் நாட்டுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ளது அந்நாட்டு ரக்பி அணி.
சனிக்கிழமையன்று ஸ்டேட் டி பிரான்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த ரக்பி போட்டியில், Antoine Dupont தலைமையிலான பிரான்ஸ் அணி, ஃபிஜி அணியை 28-7 என்ற கணக்கில் தோல்வியடையச் செய்து தங்கப் பதக்கத்தை வென்றது.
முதல் சறுக்கல்
அதே நேரத்தில், நிச்சயம் பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த பெண்கள் தடகள அணி, மண்ணைக் கவ்வியது.
குறிப்பாக, Melanie de Jesus dos Santos என்னும் தடகள வீராங்கனை, விளையாடும்போது தவறி விழ, வீராங்கனைகள் கண்ணீருடன் பதக்கத்துக்கு விடை கொடுக்க நேர்ந்தது.
பிரான்ஸ் அணி 11ஆவது இடத்தையே அடையமுடிந்ததால், ரசிகர்களும் வீராங்கனைகளும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |