இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் - மொட்டு கட்சியின் அதிரடி அறிவிப்பு
அழிவில் இருந்து மீண்டெழுந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை யாராலும் அழிக்க முடியாதென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமது கட்சி இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழிப்பதற்கு தொடர்ந்தும் பலர் முயற்சித்திருந்ததாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, தமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொல்லபட்டிருந்ததாக அவர் நினைவூட்டிள்ளார்.
எவ்வாறாயினும், சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்து தமது கட்சி அதன் அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளதாக சந்திரசேன கூறியுள்ளார்.
இந்த பின்னணியில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திகழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் தமது கட்சி பிரதான பங்கு வகிக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |