உழவர் திருநாள் ஸ்பெஷல் சிறுதானிய பொங்கல் : ரெசிபி இதோ
தை பிறந்தவுடனே அனைவரது வாழ்விலும் வழி பிறந்துவிடும். வருகின்ற 15 ஆம் திகதி தித்திக்கும் பொங்கல் திருநாள் வருகிறது.
வழக்கம் போலவே சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் போன்றவற்றை செய்யாமல், இவ்வருடம் ஆரோக்கியமாக வாழ சிறுதானியத்தை வைத்து பொங்கல் செய்து பார்க்கலாமே...
சிறுதானியத்தில் 25 சதவீத புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. வைட்டமின் ‘ஈ’, வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ், நியாசின், தயமின் மற்றும் ரிபோபிளேவின் போன்ற சத்துகளும் அதிகமாக காணப்படுகிறது.
கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எனவே வருகின்ற உழவர் தினத்தை முன்னிட்டு உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் சிறுதானியங்களை வைத்து பொங்கல் பொங்கி பார்க்கவும்.
தேவையான பொருட்கள்
-
திணை – 1 டம்ளர்
- பாசிப்பருப்பு – 1/4 டம்ளர்
-
தண்ணீர் – 4 1/2 டம்ளர்
-
வெல்லம் – 1 டம்ளர் (பொடித்தது)
- ஏலக்காய் – 4
- தேங்காய் துருவல் - 1/4 டம்ளர்
- முந்திரி பருப்பு – 6-8
செய்முறை
-
முதலில் 30 நிமிடத்திற்கு தனித்தனியாக திணை மற்றும் பாசிப்பருப்பை ஊற வைக்கவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- அடுத்து பாசிப்பருப்பை கழுவி கொதிக்கும் நீரில் நேரில் வேக வைக்கவும்.
- பாசிப்பருப்பு கொதித்து வந்தவுடன், திணை அரிசி மற்றும் 3 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடிபிடிக்காமல் கிளறவும்.
- ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் 1/4 கப் சேர்த்து கரைக்கவும்.
- பிறகு அடுப்பில் வைத்து 3 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
-
திணை அரிசியும், பாசிப்பருப்பும் நன்றாக கொதித்தவுடன், அதில் வெல்ல கரைசல் சேர்த்து அடுப்பில் 5 நிமிடத்திற்கு வேக விடவும்.
- பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்தெடுத்த முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறவும்.
- இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறினால் சூப்பரான சிறுதானிய பொங்கல் ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |