TVS-ன் Jupiter Facelift இந்தியாவில் அறிமுகம்., புதிய வடிவமைப்பு, அம்சங்களுடன்...
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை வியாழன்று (ஆகஸ்ட் 22) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய எஞ்சின், புதிய வடிவமைப்பு மற்றும் முன்பை விட அதிக சிறப்பம்சங்களுடன் இந்த புதிய ஜூபிடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் emergency stop signal, auto-cut turn indicator, distance to empty, voice commands, hazard lamps மற்றும் follow-me headlamps போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்த ஸ்கூட்டர் 4 வகைகள் மற்றும் 6 புதிய வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது.
இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .73,700 ஆக வைக்கப்பட்டுள்ளது. மற்ற வகைகளின் விலை தற்போது வெளியிடப்படவில்லை.
டிவிஎஸ் நிறுவனம் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஜூபிடர் 110 ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதற்குப் பிறகு, நிறுவனம் முதல் முறையாக பல புதுப்பிப்புகளைச் செய்துள்ளது.
இதுவரை, 65 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில், இது ஹோண்டா ஆக்டிவாவுடன் போட்டியிடுகிறது.
இதன் இருக்கை இந்த பிரிவில் மிகப்பரியது என்றும், இது முன்பு போலவே மெட்டல் பாடி பேனல்களுடன் வருகிறது என்றும் டிவிஎஸ் கூறுகிறது.
இந்த ஸ்கூட்டரில் Meteor Red Gloss, Titanium Grey Matte, Lunar White Gloss, Starlight Blue Gloss, Galactic Copper Matte மற்றும் Dawn Blue Matte கலர் ஆப்ஷன்கள் உள்ளன.
10% அதிக மைலேஜ் மற்றும் 82 கிமீ டாப் ஸ்பீடு
டிவிஎஸ் புதிய ஜூபிடரில் 109.7 சிசி எஞ்சினுக்கு பதிலாக 113.3 சிசி புதிய தலைமுறை சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் டூ வால்வ் எஞ்சின் ஏர்-கூல்டு மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இது 5,000 ஆர்பிஎம்மில் 7.91 பிஎச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 9.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த எஞ்சினுடன் எலெக்ட்ரிக் அசிஸ்ட் மற்றும் மைக்ரோ-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை டிவிஎஸ் வழங்குகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
புதிய ஜூபிடர் iGO Assist அம்சம் 10% கூடுதல் மைலேஜ் பெறும் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 82 கிமீ ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |