அனல் பறக்கும் UEFA லீக்! முதல் பரிசு மட்டும் இத்தனை கோடியா.,மகுடம் சூடப்போவது யார்?
UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு பலம் வாய்ந்த 4 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
UEFA தொடர்
ஜேர்மனியின் கிளப் அணியான பாயர்ன் முனிச் 1-0 என்ற கணக்கில் ஆர்செனல் அணியை வீழ்த்தியது.
அதேபோல் ரியல் மாட்ரிட் அணி பெனால்டியில் (4-3) மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த இரு அணிகளும் 30ஆம் திகதி நடைபெற உள்ள Leg 1 அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
மேலும், மே 2ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி டோர்ட்மண்ட் அணியை எதிர்கொள்கிறது.
பலம் வாய்ந்த 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதால், சாம்பியன் பட்டத்தை வென்று மகுடம் சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எகிறியுள்ளது.
பரிசுத்தொகை விவரம்
UEFA சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான மொத்த பரிசுத்தொகை 155 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
- சாம்பியன் - 20 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 178 கோடி)
- இரண்டாம் இடம் - 15.5 மில்லியன் யூரோ
- அரையிறுதி - 12.5 மில்லியன் யூரோ
- காலிறுதி - 10.6 மில்லியன் யூரோ
- ரவுண்ட் ஆஃப் 16 - 9.6 மில்லியன் யூரோ
- குழு பிரிவில் வெற்றியாளர் - 2.8 மில்லியன் யூரோ
- குழு பிரிவில் டிரா - 930K யூரோ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |