பிரித்தானியாவுக்கு வந்தடைந்த 35,000 புலம்பெயர்ந்தவர்கள்: கடந்த ஆண்டை விட 20% அதிகரிப்பு
பிரித்தானியாவுக்குள் சிறிய படகுகள் உதவியுடன் நுழையும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
அதிகரித்த புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை
சிறிய படகுகளில் ஆங்கிலேய சேனலை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் சிறிய படகுகள் உதவியுடன் பிரித்தானியாவுக்குள் கிட்டத்தட்ட 35,000-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகமாகும். மேலும் 2023-ல் மொத்தமாக சுமார் 29,437 பேர் சிறிய படகுகள் மூலம் ஆங்கில கால்வாய் கடந்துள்ளனர்.
கடந்த வாரம் ஒரே நாளில் 609 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாயை கடந்து வந்து சேர்ந்துள்ளனர்.
பிரச்சினையின் சிக்கலான தன்மை
பிரித்தானிய அரசு இந்த கடத்தல்களை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
பிரித்தானியாவில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு புலம்பெயர்ந்தோர் நுழைவை கட்டுப்படுத்தும் நோக்கில் 13,460 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவை விட்டு வெளியேற்றியது, இருந்தும் அரசு இந்த பிரச்சினையை தீர்க்கும் சிக்கலான தன்மையை ஒப்புக் கொண்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு அமைச்சர் டேம் அஞ்சலா ஈகிள்(Dame Angela Eagle), பிரித்தானிய அரசு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரை தடுப்பதில் தனது உறுதிப்பாட்டை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |