Green Card 2025; நீங்களும் செல்லலாம் அமெரிக்கா... உலக மக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
அமெரிக்கப் பயணம் என்பது பலருக்குக் கனவு வேலைக்காக, சிலருக்கு பேரன் பேத்தியை பல வருடங்களுக்குப் பின்பு பார்ப்பதும், இன்னும் சிலருக்கு சுற்றுலா போன்றவற்றுக்கு தேவைப்படும்.
இப்படி அமெரிக்கா செல்ல திட்டமிடும் அனைவருக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது விசா, ஆனால் இந்த விசா பெற தற்போது 1.5 வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் முக்கியமான விடயமாக உள்ளது.
அந்தவகையில் அமெரிக்கா ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை வழங்கி வருகின்றது.
பல்வகைமை குடியேற்ற விசா (Diversity Visa)
1990 ஆம் ஆண்டின் குடியேற்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பல்வகைமை குடியேற்ற விசா நிகழ்ச்சித் திட்டமானது, 1995 நிதியாண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வருடாந்த அதிர்ஷ்ட சீட்டிலுப்பு மூலம் 55,000 குடியேற்ற விசாக்கள் கிடைக்கப் பெறுகின்றன.
இச்சீட்டிலுப்பானது கடந்த ஐந்து வருடங்களில் ஐக்கிய அமெரிக்காவிற்கு குறைந்தளவான கட்டணங்களுடன் பெரும்பாலான நாடுகளிலிருந்து விண்ணப்பதாரிகளைத் தெரிவு செய்வதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவில் குடியேற்றச் சனத்தொகையை பல்வகைப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
2025 பல்வகைமை குடியேற்ற விசா
இந்த விசாவிற்கு அனைவரும் தனது குடும்பத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த விசாவிற்கு ஆக்டோபர் மாதம் 5 ஆம் திகதியில் இருந்து அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.
உதவிக்குறிப்புகள்
1 - நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை அறிய, dvprogram.state.gov இல் உள்ள வழிமுறைகளைப் படிக்கவும். நீங்கள் தகுதியற்றவர் என்றால் பூர்த்தி செய்ய வேண்டாம்.
2 - அமெரிக்க அரசாங்க இணையதளங்களை மட்டுமே நம்புங்கள். DV-2025 தகவலின் அதிகாரப்பூர்வ ஆதாரம் “.gov” இல் முடிவடையும் தளங்கள் மட்டுமே.
3 – உங்கள் பதிவைச் சமர்ப்பிக்க dvprogram.state.gov க்குச் செல்லவும். நுழைவதற்கான ஒரே வழி இதுதான். மோசடி தளங்களால் ஏமாறாதீர்கள்.
4 - நுழைவதற்கு கட்டணம் இல்லை. நீங்கள் பணம் செலுத்தினால் உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்த முடியும் என்று கூறுபவர்கள் அல்லது உங்கள் விண்ணப்பத்தை இலவசமாக பூர்த்தி செய்ய முன்வருபவர்களிடம் ஜாக்கிரதை.
5 - கடந்த ஆறு மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பயன்படுத்தவும். பழைய புகைப்படத்தைப் பயன்படுத்துவது உங்களைத் தகுதியற்றதாக்கும்.
6 - ஒரு நபருக்கு ஒரு பதிவை மட்டும் சமர்ப்பிக்கவும். ஒரு DV சீசனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முதன்மை நுழைவுகளைக் கொண்ட நபர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
7 - உங்களுடன் பயணம் செய்யாவிட்டாலும் அல்லது குடியேறாவிட்டாலும் கூட, உங்கள் மனைவி மற்றும் 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத குழந்தைகள் அனைவரையும் உங்கள் விண்ணப்பத்தில் பட்டியலிட மறக்காதீர்கள்.
8 - உங்கள் தனிப்பட்ட உறுதிப்படுத்தல் எண்ணை வைத்திருங்கள். மே 2024 இல் தேர்வுகள் செய்யப்படும்போது, உள்ளீட்டின் நிலையைச் சரிபார்க்க உங்களுக்கு இது தேவைப்படும்.
9 – மே 2024 இல் தேர்வுகள் செய்யப்படும். dvprogram.state.gov/ESC என்ற இணையதளம் மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்களா என்பதை பார்க்க முடியும்.
10 - தேர்ந்தெடுக்கப்படுவது உங்களுக்கு நேர்காணல் அல்லது விசாவிற்கு உத்தரவாதம் அளிக்காது.
நவம்பர் 7 ஆம் திகதியுடன் இந்த வருடத்திற்கான பதிவுகள் நிறுத்தப்படுகிறது.
பதிவை பதிவு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். கடைசி நிமிடங்களில் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதில் பல தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.
ஆகவே இந்த இணையத்திளத்தின் dvprogram.state.gov/application வாயிலாக சென்று உடனே விண்ணப்பிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |