ரோஸ் தினம் முதல் காதலர் தினம் வரை: Valentine's Week-யை எப்படி சிறப்பாக கொண்டாடலாம்? சூப்பரான Tips
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது, ஆனால் இந்த வாரம் முழுவதும் காதலர்களுக்கான அன்புக்குரிய நாட்கள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
காதலர் தின கொண்டாட்டம்
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் திகதியை நாம் காதலர் தினமாக கொண்டாடி வருகிறோம், உலகில் உள்ள அனைத்து காதலர்களும் புனிதமான நாளான இந்த நாள், ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் காதலை எல்லையில்லாமல் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அத்துடன் தனது மனதிற்கு பிடித்த நபருக்கு பரிசுகளை வழங்குவது, காதல் நிறைந்த இனிய வார்த்தைகளை இதயப்பூர்வமாக பரிமாறிக் கொள்வது, பூக்களை பேரன்போடு வழங்குவது, அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுப்பது என பார்த்து பார்த்து கவனித்துக் கொள்வார்கள்.
சரியான தருணத்திற்காக சிலர் காத்திருந்து தனது மனதில் உள்ள காதலை காதலர் தினத்தில் வெளிப்படுத்துவர், இந்த நாள் அப்படிப்பட்ட சிறப்பான நாளாக காதலர்கள் மத்தியில் போற்றப்படுகிறது.
காதலர் தினமானது பிப்ரவரி 14ம் திகதி வந்தாலும், காதலர்களுகளின் மனதிற்கு பிடித்த நாட்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கி விடுகிறது.
- Rose Day - ரோஸ் தினம்(February 7)
- Propose Day - காதலை வெளிப்படுத்தும் தினம்(February 8)
- Chocolate Day - சாக்லேட் தினம்(February 9)
- Teddy Day - டெடி தினம்(February 10)
- Promise Day - வாக்குறுதி தினம்(February 10)
- Hug Day - அரவணைப்பு தினம்(February 12)
- Kiss Day - முத்த தினம்(February 13)
- Valentine's Day - காதலர் தினம்(February 14)
Rose Day - ரோஸ் தினம்(பிப்ரவரி 7)
காதல் அடையாளங்களில் ஒன்றான ரோஸ் பூவை மனதிற்கு பிடித்த நபருக்கு ரோஸ் தினத்தின் போது வழங்கலாம், ஏன் மலர்கொத்தை கூட (bouquet) அனுப்பி வைக்கலாம்.
இந்த தினத்தில் நீங்கள் வழங்கும் ரோஸ் பூவின் ஒவ்வொரு நிறமும் ஒரு வித அன்பை வெளிப்படுத்தும். சிவப்பு ரோஸ்-காதல், மஞ்சல் ரோஸ்- நட்பு, பிங்க் ரோஸ்- பாராட்டு மற்றும் மரியாதை.
Propose Day - காதலை வெளிப்படுத்தும் தினம்(பிப்ரவரி 8)
ப்ரபோஸ் தினத்தன்று தங்கள் மனதில் உள்ள பிரியத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் தயக்கம் இல்லாமல் வெளிப்படுத்தலாம்.
சிலர் காதலர்கள் இந்த ப்ரபோஸ் தினத்தன்று தங்கள் திருமண விருப்பத்தை கூட வெளிப்படுத்துகின்றனர்.
Chocolate Day - சாக்லேட் தினம்(பிப்ரவரி 9)
இந்த தினத்தில் தனக்கு பிடித்தமான நபர்களுக்கு, காதல் விருப்பம் நாம் வைத்து இருப்பவர்களுக்கு மற்றும் தன்னுடைய ஜோடிக்கு சாக்லெட்களை பரிசாக வழங்கி மகிழ்ச்சிப்படுத்தலாம்.
சாக்லேட் பிடிக்காத நபர்களுக்கு அவர்களுக்கு பிடித்த பண்டங்கள் அல்லது பொருட்களை கூட பரிசாக வழங்கலாம்.
Teddy Day - டெடி தினம்(பிப்ரவரி 10)
டெடி தினத்தில் பிரியமானவர்களுக்கு டெட்டி பியர் பொம்மைகளை பரிசாக வழங்கலாம். நீங்கள் வழங்கும் டெடி பியர் பொம்மை உங்கள் இணையரின் துக்கம் தனிமையை நீக்கும் என சொல்லப்படுகிறது.
Promise Day - வாக்குறுதி தினம்(பிப்ரவரி 11)
வாக்குறுதி தினத்தில் இணையர்கள் தங்களின் உறவை வலுப்படுத்த சில வாக்குறுதிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்த வாக்குறுதிகள் காதலர்களின் அன்பை வலுவடைய செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.
Hug Day - அரவணைப்பு தினம்(பிப்ரவரி 12)
அரவணைப்பு தினத்தன்று பிரியமானவர்களை அரவணைத்து கட்டிக் கொள்வதன் மூலம் துன்பங்கள் மறைந்து போகும், அதிலும் அன்புக்குரியவர்களிடம் இருந்து கிடைக்கும் அரவணைப்பு அனைத்து துக்கங்களையும் கரைத்துவிடும் என நம்பப்படுகிறது.
Kiss Day - முத்த தினம்(பிப்ரவரி 13)
முத்தங்கள் காதலின் முதல் மொழியாக பார்க்கப்படுகிறது, உச்சக்கட்ட அன்பு மரியாதை, பாசம் என அனைத்து ஒற்றை முத்தத்தில் நமது அன்புக்குரியவர்களிடம் கடத்திவிட முடியும். எனவே பிப்ரவரி 13ம் திகதி தனது முத்தத்தை பகிர்ந்து தங்கள் தடையற்ற அன்பை இணையருக்கு பரிமாறுகிறார்கள்.
Valentine's Day - காதலர் தினம்( பிப்ரவரி 14)
காதலர் தினம் விளக்கங்கள் தேவையில்லை, அன்பை விதைத்து, அன்பை பெறும் நாள். கணவன்-மனைவி, காதலன்-காதலி மட்டும் கொண்ட கூடிய நாள் அல்ல இந்த காதலர் தினம்.
தாய், தந்தை, நண்பன், செல்லப்பிராணி, உங்கள் வீட்டு மரம் அதிலுள்ள பூ-விடம் கூட அன்பை பரிமாறிக் கொண்டு இந்த உலகின் உன்னதமான காதலர் தினத்தை நீங்கள் கொண்டாடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Valentine's Week, Love Celebration, Romantic Moments, Full List 2024, Love Journey, Unveiling Secrets, Passionate Adventure, Grand Finale, Heartfelt Memories, Eternal Love, Romantic Reflections, Love Beyond Limits, Valentine's Day, Emotional Connection, Love Symphony, Farewell Love, Valentine's Week Full List 2024,