உலகின் டாப் 5 பணக்கார குடும்பங்கள் - அம்பானி குடும்பம் எந்த இடத்தில் உள்ளது?
இந்தியாவை பொறுத்தளவில் பணக்கார குடும்பம் என்றால் அது அம்பானி குடும்பம் தான். அதுவே உலகளவில் பார்த்தால் அம்பானி குடும்பம் கீழே உள்ளது.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார குடும்பங்களில் முதல் 5 இடத்தில் உள்ள குடும்பங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
1. வால்டன் குடும்பம்
பணக்கார குடும்பப்பட்டியலில் வால்டன் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. அவர்களின் பங்கு அதிகரித்ததன் காரணமாகவே மீண்டும் முதலிடத்தில் உள்ளனர். இந்த அதிகரிப்பு அவர்களின் மொத்த சொத்து மதிப்பில் 172.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதிகரித்துள்ளது.
அவர்களின் சொத்து ஒவ்வொரு நாளும் USD 473.2 மில்லியன் அல்லது ஒரு நிமிடத்திற்கு USD 328,577 அதிகரித்தது.
உலகளவில் 10,600 ஸ்டோர்களை இயக்கி வரும் வால்டன்ஸ் வால்மார்ட்டில் 46% பங்குகளை வைத்துள்ளது மற்றும் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சில்லறை வணிகங்களில் ஒன்றாக உள்ளது.
2. அல் நஹ்யான் குடும்பம் (UAE)
அல் நஹ்யான் குடும்பம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அரச குடும்பத்தின் மதிப்பு 323.9 பில்லியன் டாலர்களாகும்.அவர்களின் செல்வம் பெரும்பாலும் எண்ணெய் மீதான வணிகங்களின் அடிப்படையில் தான் கிடைக்கிறது.
3. அல் தானி குடும்பம் (கத்தார்)
கத்தாரில் உள்ள அல் தான் குடும்பம் 172.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அவர்களின் செல்வம் நாட்டின் எரிவாயு மற்றும் எண்ணெய் இருப்புகளிலிருந்து வருகிறது. அல் தானி அரச குடும்பம் எட்டு தலைமுறைகளைக் கொண்டுள்ளது.
4. ஹெர்மிஸ் குடும்பம் (பிரான்ஸ்)
உலகின் ஐகானிக் ஆடம்பர பொருட்களின் பிராண்டான ஹெர்மேஸின் உரிமையாளர்கள் இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளனர். இந்த குடும்பம் 170.6 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் ஆவர்.
5. கோச் குடும்பம் (அமெரிக்கா)
அமெரிக்காவை சேர்ந்த கோச் குடும்பம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 148.5 பில்லியன் டாலர்கள் இரக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் வருவாய் எண்ணெய் மற்றும் பல்வகைப்பட்ட தொழில்கள் மூலம் கிடைக்கிறது.
6. அம்பானி குடும்பம் (இந்தியா)
அம்பானி குடும்பம் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. அம்பானிகளின் மதிப்பு 99.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் அவர்களின் செல்வத்தின் பெரும்பகுதியாகும்.
7. மிஸ்ட்ரிஸ் குடும்பம்
ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தை மேற்பார்வையிடும் ஐந்து தலைமுறைகளைக் கொண்ட மிஸ்திரி குடும்பம், $41.4 பில்லியன் கூட்டுச் செல்வத்தை வைத்திருக்கிறது, பட்டியலில் 23வது இடத்தைப் பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |