2024-ன் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள்., பின்தங்கிய நிலையில் பிரித்தானியா
2024ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் முதல் 30 இடங்களில் கூட பிரித்தானியா (UK) இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் UAE
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்ட நாடாக, நான்காவது முறையாக யுனைடெட் அரபு அமீரகம் (UAE) முதலிடத்தை பிடித்துள்ளது.
UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகின் 90 சதவீத பகுதிகளை அணுக முடியும். அவர்கள் 133 நாடுகளை விசா இல்லாமல் சென்றடைய முடியும் மற்றும் 47 நாடுகளில் விசா-ஆன்-அறைவல் மூலம் அனுமதி பெற முடியும்.
இதனால், UAE பாஸ்போர்ட் 180 என்ற மொபிலிட்டி ஸ்கோர் பெற்றுள்ளது.
டாப் 20 முழுக்க ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய நாடுகள் முதல் 20 இடங்களில் 19 இடங்களை பிடித்துள்ளன. ஸ்பெயின், ஜேர்மனியை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
பின்லாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜி20 நாடுகளின் தரவரிசையில், பிரான்ஸ் (4வது இடம்) மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பெற்றுள்ளது.
பட்டியலில் பின்தங்கிய நிலையில் பிரித்தானியா, அமெரிக்கா
பிரித்தானிய பாஸ்போர்ட் இந்த ஆண்டும் கீழே இறங்கி 32வது இடத்தில் உள்ளது.
பிரித்தானிய பாஸ்போர்ட் இருந்தால் 125 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம், மேலும் 49 நாடுகளில் Visa-On-Arrival மூலம் அனுமதி பெறலாம்.
அதேபோல், அமெரிக்கா 38வது இடத்தில் உள்ளது. அமெரிக்க குடியுரிமையாளர்கள் 123 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம், மேலும் 50 நாடுகளில் Visa-On-Arrival மூலம் அனுமதி பெற முடியும்.
இப்பட்டியலில், 40 என்ற மொபிலிட்டி ஸ்கோருடன் உலகின் மிகச் சலுகை குறைந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் சிரியா உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |