புதிய எஞ்சினுடன் 2025 Honda Activa 125 அறிமுகம்., விலை என்ன?
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் Activa 125 ஸ்கூட்டரின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.
புதிய வண்ணங்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது இப்போது LCD டிஸ்ப்ளேவுக்கு பதிலாக புதிய 4.2 அங்குல TFT டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது நிகழ்நேர மைலேஜ், சராசரி மைலேஜ் மற்றும் distance to empty தகவல்களை வழங்கும்.
டிஸ்ப்ளே ஹோண்டாவின் RoadSync செயலியுடன் இணைக்க முடியும், இது பயனர்கள் call alerts மற்றும் navigation assist போன்ற செயல்பாடுகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
ஸ்கூட்டரில் USB Type-C charging port-டும் உள்ளது.
டாப்-ஸ்பெக் ஸ்மார்ட் வேரியண்ட் H-Smart தொழில்நுட்பத்தைப் பெறும், இது கார் போன்ற keyless அம்சங்களையும் வழங்குகிறது.
2025 ஹோண்டா ஆக்டிவா கார் 6 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது.
புதிய 2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் தற்போது டிஎல்எக்ஸ் மற்றும் ஸ்மார்ட் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை ரூ.94,422-ல் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருந்து தொடங்குகின்றன, இது தற்போதைய மாடலை விட ரூ.14,186 அதிகமாகும்.
இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் ஜூபிடர் 125-உடன் போட்டியிடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2025 Honda Activa 125, 2025 Honda Activa 125 price