புதிய Honda Unicorn Facelift பைக் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?
Honda நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Unicorn Facelift மொடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) தனது இருசக்கர வாகன வரிசையை இந்திய சந்தைக்காக மேம்படுத்திவருகிறது.
Honda Activa 125, Honda SP125 மற்றும் Honda SP160 ஆகியவற்றை அப்டேட் செய்த பின்னர், நிறுவனம் இப்போது Honda Unicorn-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025 ஹோண்டா யூனிகார்னின் எஞ்சின் OBD2B விதிமுறைகளுக்கு இணங்க புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக் லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது. நிறுவனம் இந்த பைக்கை ஒரே வேரியண்ட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ .1.19 லட்சம் (டெல்லி, எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக் Hero Xtreme 160R 2V, Bajaj Pulsar N160 மற்றும் TVS Apache RTR 160 4V ஆகிய 160சிசி Commuter மொடல்களுடன் போட்டியிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2025 Honda Unicorn, 2025 Honda Unicorn Price, 2025 Honda Unicorn Facelift