2025ம் ஆண்டில் இந்தியாவின் டாப் 5 பணக்காரர்கள் யார்? மிரள வைக்கும் சொத்து மதிப்பு விவரங்கள்
உலகின் டாப் பணக்காரர்களின் சொத்து மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்வது பெரும்பாலானோருக்கு ஆர்வம் அதிகம். அதன்படி, அவ்வப்போது வெளியாகும் உலகின் பணக்காரர்கள் பட்டியல் எப்போதுமே பொதுமக்களிடையே எதிர்பார்ப்புகளை தூண்டும்.
இதற்கிடையில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2025 ம் ஆண்டின் டாப் 5 பணக்காரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2025 ம் ஆண்டின் டாப் 5 இந்திய பணக்காரர்கள்
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் குழும தலைவரான முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 92.5 பில்லியன் அமெரிக்க டொலராகும். எண்ணெய், எரிவாயு, தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகம் ஆகியவை இவரது சொத்து ஆதாரங்கள் ஆகும்.
முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் தரவரிசையில் 18வது இடத்தில் உள்ளார்.
கவுதம் அதானி
உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறையில் மிகப்பெரிய முதலீடு செய்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார்.
இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 56.3 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
கவுதம் அதானி உலக பணக்காரர்கள் தரவரிசையில் 28வது இடத்தில் உள்ளார்.
சாவித்திரி ஜிண்டால் குடும்பம்
எஃகு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை கையாண்டு வரும் சாவித்திரி ஜிண்டால் குடும்பம் இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
சாவித்திரி ஜிண்டால் குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு சுமார் 35.5 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
சாவித்திரி ஜிண்டால் குடும்பம் உலக பணக்காரர்கள் தரவரிசையில் 48 வது இடத்தில் உள்ளது.
ஷிவ் நாடார்
தகவல் தொழில்நுட்ப துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் இந்த தரவரிசையில் 4வது இடம் பிடித்துள்ளார்.
இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 34.5 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
ஷிவ் நாடார் உலக பணக்காரர்கள் தரவரிசையில் 51 வது இடத்தில் உள்ளார்.
திலீப் சங்வி
இந்திய மருந்து துறையில் தனக்கென சிறப்பு இடத்தை பிடித்துள்ள சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் திலீப் சங்வி இந்த தரவரிசையில் 5வது இடம் பிடித்துள்ளார்.
இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 24.9 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
திலீப் சங்வி உலக பணக்காரர்கள் பட்டியலில் 79வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |