ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு - இறுதிப்போட்டி எங்கு நடைபெறும்?
ஐபிஎல் பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெற உள்ள மைதானங்களை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிளே ஆஃப் மைதானங்கள்
2025 ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 ஆம் திகதி தொடங்கி ஜூன் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக புதிய அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது.
இதில், பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பற்றி குறிப்பிடவில்லை. பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மும்பை மற்றும் டெல்லி அணிக்கு இடையே பிளே ஆஃப் செல்வதில் போட்டி நிலவுகிறது.
தற்போது பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் குறித்து ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மே 29 மற்றும் மே 30 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டி பஞ்சாப்பில் உள்ள முல்லான்பூரில் நடத்தப்படவுள்ளது.
Destination ▶ Playoffs
— IndianPremierLeague (@IPL) May 20, 2025
🏟 New Chandigarh
🏟 Ahmedabad
Presenting the 2️⃣ host venues for the #TATAIPL 2025 playoffs 🤩 pic.twitter.com/gpAgSOFuuI
ஜூன் 1 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
அதே போல், பெங்களூரில் தொடர் கனமழை பெய்து வருவதால், வரும் 23ம் திகதி நடைபெற இருந்த பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |