ரூ.13.49 லட்சத்தில் புதிய Kawasaki Ninja 1100SX அறிமுகம்
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி இந்தியா (Kawasaki India) நிறுவனம் தனது 2025 ஸ்போர்ட்ஸ் பைக்கான Kawasaki Ninja 1100SX மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த Sports Tourer பைக்கை புதிய சிறப்பம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட Powertrain உடன் அறிமுகம் செய்துள்ளது.
இது three-level traction control மற்றும் cruise control போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இதன் ஆரம்ப விலை ரூ.13,49,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது மார்ச் 2024-இல் நிறுத்தப்பட்ட Ninja 1000SX-க்கு மாற்றாக வெளியாகியுள்ளது.
இந்த பைக்கிற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டதால், டிசம்பர் இறுதிக்குள் டெலிவரி தொடங்கலாம்.
Kawasaki Ninja 1100SX பைக்கிற்கு இந்திய இருசக்கர வாகன சந்தையில் நேரடி போட்டியாளர் இல்லை.
ஆனால் விலையின் அடிப்படையில், Ducati SuperSport 950, Suzuki Katana, BMW F900 XR போன்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளுடன் போட்டியிடுகிறது.
இந்த பைக் Metallic Matte Graphene Steel Grey/Metallic Diablo Black colour schem-ல் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kawasaki Ninja 1100SX