புதிய MG Astor ரூ.10 லட்சத்தில் அறிமுகம்
JSW-MG India நிறுவனம் 2025 Astor எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இது personal AI assistance மற்றும் Level-2 Advanced Driver Assistance System (ADAS) உட்பட 49-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.
இந்த புதிய மொடலின் மிட்-வேரியண்ட் Shine மற்றும் Select வேரியண்ட்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இப்போது Astor Shine வேரியண்ட்டில் panoramic sunroof மற்றும் 6-speaker sound system உள்ளது.
இதன் மூலம், எம்ஜி Astor அதன் பிரிவில் ரூ.12.5 லட்சத்திற்கு கீழ் பனோரமிக் சன்ரூஃப் வழங்கும் முதல் எஸ்யூவி ஆகும்.
மறுபுறம், Astor Select வேரியண்ட் இப்போது six airbags மற்றும் leatherette seat upholstery-யை பெறுகிறது.
ஷைன் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் விலை ரூ.36,000 இது எம்ஜி ஆஸ்டர்ஸின் விலையையும் அதிகரித்துள்ளது, இருப்பினும் அதன் ஆரம்ப விலை இன்னும் ரூ.10 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.
Astor ஷைன் பெட்ரோல் மேனுவல் வேரியண்டின் விலை ரூ.36,000 வரையிலும், செலக்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் விலை ரூ.38,000 வரையிலும் அதிகரித்துள்ளது. மற்ற வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தியாவில், இது Kia Seltos, Hyundai Creta, Maruti Grand Vitara, Toyota Hyryder, Honda Elevate, Volkswagen Taigun மற்றும் Skoda Kushaq போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2025 MG Astor