பெண்களுக்கு பாதுகாப்பற்ற இந்திய நகரங்கள் - வெளியானது 2025 NARI அறிக்கை
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான, பாதுகாப்பற்ற இந்தியா நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு
நார்த்கேப் பல்கலைக்கழகம் மற்றும் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் இணைந்து, 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வருடாந்திர அறிக்கை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறியீட்டை(NARI) வெளியிட்டுள்ளனர்.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
31 நகரங்களில், 12,770 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெண்களின் பாதுகாப்பு மதிப்பெண் 65 சதவீதமாக கண்டறியப்பட்டுள்ளது.
நகரங்களில் வசிக்கும் பெண்களில் 40% பேர் பாதுகாப்பாக இல்லை என தெரிவித்துள்ளனர்.
பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளில் அதிக துன்பறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற நகரங்கள்
3 இல் ஒருவர் மட்டுமே தனக்கு நடந்த பாதிப்பை புகார் அளித்துள்ளார். 53% பெண்களுக்கு தங்கள் பணியிடத்தில், சட்டத்தால் கட்டாயமாக்கப்பட POSH(பாலியல் துன்புறுத்தல் தடுப்பு) கொள்கை உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை.
டெல்லி, கொல்கத்தா, ராஞ்சி, பாட்னா, ஜெய்பூர் பரிதாபத், ஸ்ரீநகர் ஆகிய நகரங்கள் பெண்களுக்கு மிகக்குறைந்த பாதுகாப்பு உள்ள நகரங்களாக உள்ளது.
மும்பை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், இட்டாநகர், காங்டாக், ஐஸ்வால் ஆகிய நகரங்கள் பாதுகாப்பான நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |