பரீட்சை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
இலங்கையில் 2025 ஆம் ஆண்டு முதல் க.பொ.த உயர்தர மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் மீது தேவையற்ற மன அழுத்தத்தை திணிக்காமல் பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் கட்டமைப்பை அமைக்குமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் பரீட்சை திகதிகள் நிர்ணயம் செய்யப்பட்டதன் பின்னர் அவற்றை மாற்றியமைக்கும் அதிகாரம் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கோ கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |