Galaxy S25 Ultra, iPhone SE., 2025-ல் வெளியாகவிருக்கும் முக்கிய ஸ்மார்ட்போன்கள்
2025-ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் பல முக்கிய மொடல்கள் அறிமுகமாக உள்ளன.
தரமான அம்சங்களுடன் வரும் இந்த மொடல்கள், புதிய அனுபவங்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S25 Ultra
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா, 2025 ஆண்டின் சிறந்த Android மொடலாக இருக்கும் என கருதப்படுகிறது.
இது Snapdragon 8 Elite processor-ஐ வழங்கும், மேலும் 6,000mAh பேட்டரி திறனுடன் வருகிறது.
S Pen Stylus மற்றும் தட்டையான டிசைனில் பல அப்டேட்களுடன் வரும் என கூறப்படுகிறது.
OnePlus Open 2
ஒன்ப்ளஸ் Open 2 மடிக்கக்கூடிய மொடலாக, இன்னும் மெல்லிய வடிவமைப்புடன் அதிக திறனுடைய Camera-உடன் வரும் என கூறப்படுகிறது.
Snapdragon 8 Elite processor மற்றும் 6,000mAh பேட்டரி உள்ளிட்ட இந்த மாடல் பிரீமியம் தரத்தில் இருக்கும்.
Nothing Phone 3
Nothing Phone 3, தன்னுடைய Glyph UI லைட்டிங் வடிவமைப்பில் புதிய மாற்றங்களுடன் வருகிறது.
50 மெகாபிக்சல் Camera மற்றும் பிரகாசமான திரை ஆகியவை இந்த மொடலின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
iPhone SE (2025)
Apple-ன் புதிய iPhone SE, iPhone XR அல்லது iPhone 12 வடிவமைப்புடன், விலை குறைந்த விலையில் வெளியாகும் என கூறப்படுகிறது.
A18 Processor, 48MP Camera மற்றும் 6.1 அங்குல திரை இந்த மாடலில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
Google Pixel 10 Pro
Google Pixel 10 Pro மாடல், அதிக எண்ணிக்கையிலான சென்சார்கள் மற்றும் AI மேம்பாடுகளுடன் Google Gemini அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது.
சுயநலனுக்கான ஆலோசனைகள் மற்றும் சுகாதார எச்சரிக்கைகளை வழங்கும் இந்த மாடல், ஸ்மார்ட்போன்களின் நிலையை மாற்றும் என நம்பப்படுகிறது.
இந்த மொடல்கள் 2025ஆம் ஆண்டின் டெக் உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |