TVS Apache RTR 160 4V புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்., சிறப்பம்சங்கள், விலை விவரம் இதோ
டிவிஎஸ் மோட்டார் இந்தியா நிறுவனம் TVS Apache RTR 160 4V பைக்கின் புதிய டாப் வேரியண்ட்டை இன்று (நவம்பர் 19) அறிமுகம் செய்துள்ளது.
புதிய வேரியண்ட்டின் விலை ரூ.1.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இது இந்த பைக்கின் மிகவும் விலையுயர்ந்த வேரியண்ட் ஆகும்.
அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் மொத்தம் 7 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது,
இந்த புதிய வேரியண்ட் Hero Xtreme 160R, Honda Hornet 2.0, Pulsar N160 மற்றும் Pulsar NS160 ஆகிய பைக்குகளுடன் போட்டியிடும்.
இந்த புதிய வேரியண்ட்டில் shining golden color upside down (USD) front forks, stabilizer bullpup exhaust மற்றும் மூன்று புதிய வண்ண விருப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் Granite Gray, Matte Black மற்றும் Pearl White ஆகியவை அடங்கும்.
இது தவிர, race-inspired graphics, பைக்கிற்கு ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்க red color alloy wheels வழங்கப்பட்டுள்ளன.
செயல்திறன்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 159.7சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 வால்வ் ஏர்/ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது அர்பன், ரெயின் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரைடிங் மோடுகளைப் பெறுகிறது.
இந்த எஞ்சின் அர்பன் மற்றும் ரெயின் மோட்களில் 15.64 பிஎஸ் பவரையும், 14.14 என்எம் அதிகபட்ச டார்க்கையும் உருவாக்குகிறது. அதே நேரத்தில், ஸ்போர்ட் மோடில், இது 17.55 பிஎஸ் பவரையும் 14.73 என்எம் அதிகபட்ச டார்க்கையும் உருவாக்குகிறது.
இந்த பைக்கின் டாப் ஸ்பீடு அர்பன் மற்றும் ரெயின் மோடில் 103 கிமீ வேகத்திலும், ஸ்போர்ட் மோடில் 114 கிமீ வேகத்திலும் செல்லும். இது Glide Through Technology (GTT) with race tuned fuel injection system, adjustable clutch மற்றும் brake lever ஆகியவற்றை பெறுகிறது.
பிரேக்கிங், சஸ்பென்ஷன் மற்றும் அம்சங்கள்
வசதியான ரைடிங்கிற்கு, அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி இன் டாப் வேரியண்ட் முன்புறத்தில் புதிய upside down (USD) fork மற்றும் பின்புறத்தில் adjustable monoshock Suspension unit ஆகியவற்றைப் பெறுகிறது. பின்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.
இந்த பைக்கில் TVS SmartConnect system வழங்கப்பட்டுள்ளது. turn-by-turn navigation, call and SMS alerts, race telemetry, adjustable brakes and clutch levers, lean angle mode, crash alert, low fuel warning மற்றும் voice assist போன்ற அம்சங்கள் இதில் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2025 TVS Apache RTR 160 4V