TVS-ன் புதிய 2025 Ronin பைக் அறிமுகம்., விலை, அம்சங்கள்
TVS Motor Company தனது வருடாந்திர பைக்கிங் நிகழ்வான MotoSoul 4.0-ல் தனது நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிள் Ronin 2025 பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த பைக்கில் இப்போது பாதுகாப்பிற்காக dual-channel anti-lock braking system உள்ளது மற்றும் சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் இப்போது Delta Blue மற்றும் Stargaze Black வண்ண விருப்பங்களுக்கு பதிலாக Glacier Silver மற்றும் Charcoal Amber ஆகிய இரண்டு புதிய வண்ண விருப்பங்களில் மோட்டார்சைக்கிளை வாங்கலாம்.
இது தவிர, இது Magma Red, Stargaze Black, Galactic Gray, Dawn Orange, Nimbus Gray மற்றும் Midnight Blue வண்ணங்களைப் பெறுகிறது.
நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பைக்கை ஜனவரி 2025-இல் அறிமுகப்படுத்தும். வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அல்லது தங்கள் அருகிலுள்ள டீலர்ஷிப்பிற்குச் சென்று பைக்கை முன்பதிவு செய்யலாம்.
Kawasaki W175 மற்றும் Royal Enfield Hunter 350 உள்ளிட்ட பிற நியோ-ரெட்ரோ மோட்டார்சைக்கிள்களுடன் TVS Ronin போட்டியிடுகிறது.
டிவிஎஸ் ரோனின் வேரியண்ட் - விலை
Ronin SS- ரூ.1,35,000
Ronin DS- ரூ.1,56,700
Ronin TD- ரூ.1,68,950
Festival Edition- ரூ.1,72,700
இந்த பைக்கில் இருக்கும் 225.9cc air-and-oil-cooled single-cylinder engine அதிகபட்சமாக 20.1 பிஎச்பி பவரையும், 19.93 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லிவர்கள் மற்றும் அர்பன் மற்றும் ரெயின் ஆகிய இரண்டு ஏபிஎஸ் மோட்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |