அகஸ்ட் 12 வெளியாகும் புதிய Yezdi Roadster: சிறப்பம்சங்கள், விலை குறித்த தகவல்
Yezdi Motor நிறுவனம் தனது புதிய 2025 Roadster மோட்டார்சைக்கிளை ஆகஸ்ட் 12, 2025 அன்று இந்தியாவில் வெளியிட தயாராகியுள்ளது.
இந்த புதிய மோடல் முக்கியமான புதுப்பிப்புகளுடன் வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Yezdi Roadster புதிய அம்சங்கள் என்ன?
புதிய யெஸ்தி ரோட்ஸ்டர், மேம்பட்ட build quality, LED headlamp, புதிய LED turn indicators மற்றும் புதிய வண்ண விருப்பங்கள் ஆகியவற்றுடன் வரலாம். இது 2022ல் அறிமுகமான முதல் ரோட்ஸ்டர் மாடலுக்கு பிறகு மிக முக்கியமான மேம்பாட்டாகும்.
எஞ்சின் மற்றும் ஆற்றல்:
புதிய ரோட்ஸ்டர், 334cc liquid-cooled Alpha 2 எஞ்சினுடன் வரலாம், இது தற்போது Yezdi Adventure மொடலில் பயன்படுத்தப்படுகிறது. இதில் 29.6 bhp Power மற்றும் 29.9 Nm torque, 6-speed gearbox-உடன் இணைக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்:
முன்புறத்தில் telescopic forks, பின்னால் twin shock observers மற்றும் இருபுற சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் dual-channel ABS வழங்கப்படும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்:
தற்போதைய ரோட்ஸ்டர் விலை ரூ.2.10 லட்சம் முதல் ரூ.2.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. புதிய மொடல் சிறிய அளவிலான விலை உயர்வு ஏற்படலாம்.
இது Honda CB350, Royal Enfield Meteor 350, Triumph Speed 400 போன்ற மொடல்களுடன் நேரடியாக போட்டியிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2025 Yezdi Roadster launch date, New Yezdi Roadster price, Yezdi Roadster specifications, Yezdi Alpha 2 engine, Roadster vs CB350, Yezdi Roadster vs Meteor 350, Yezdi Roadster updates 2025, New motorcycles in India 2025, Yezdi bikes August launch, 2025 Roadster features India