2026 ம் ஆண்டின் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடத்தில் இவரா? 27% அதிகரித்த டிரம்பின் சொத்து
2026 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ்(Forbes) உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
முதலிடத்தில் எலான் மஸ்க்
உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா(Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சுமார் $839 பில்லியன் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அத்துடன் SpaceX நிறுவனம் விரைவில் பொது பங்குகளை வெளியிட உள்ளதால் எலான் மஸ்க், முதல் ‘டிரில்லியனர்” பணக்காரர் என்ற பெரும் மதிப்பை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப துறையில் உள்ள முன்னணி பணக்காரர்கள்
தொழில்நுட்ப துறையை பொருத்தவரை Google நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி பேஜ் கிட்டத்தட்ட $257 பில்லியன் சொத்துமதிப்பும், மற்றொரு Google நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் $237 பில்லியன் சொத்துமதிப்பும் கொண்டுள்ளனர்.
இவர்களை தொடர்ந்து அமேசான்(amazon) நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் $224 பில்லியன் சொத்துகளும், மெட்டா(meta) நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் $222 பில்லியன் சொத்துக்களும் வைத்துள்ளனர்.
உயர்ந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சொத்து மதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 27% உயர்ந்து $6.5 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
சட்ட ரீதியான அபராதங்கள் ரத்து மற்றும் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் ஆகியவை டிரம்பின் இந்த சொத்து உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் டிரம்ப் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 645-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை
2026 ம் ஆண்டு கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,428 ஆக அதிகரித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இந்த 3,428 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் $20.1 டிரில்லியன், அதாவது கிட்டத்தட்ட ரூ.1,680 லட்சம் கோடி ஆகும். இது கடந்த ஆண்டை வீட சுமார் $4 டிரில்லியன் அதிகமாகும்.
மேலும் இந்த பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 390 கோடீஸ்வரர்கள் இணைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |