கவாஸாகியின் புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்.., தலை சுற்றவைக்கும் விலை
ஜப்பானை சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான கவாஸாகி புதிய மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
புதிய பைக் அறிமுகம்
கவாஸாகி நிறுவனம் நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் (Ninja ZX-6R) என்ற புதிய மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
Sports ரக பைக்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கானது 'லைம் க்ரீன்' (Lime Green) என்கிற இளம் பச்சை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் Ex-showroom விலை ரூ.11 லட்சத்து 69 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது ஸ்போர்ட்ஸ் பைக்கான நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் பைக்கை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் முன்பக்கத்தில் LED Headlights வழங்கப்பட்டுள்ளது. மேலும், Chassis உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தபைக்கில் 636cc liquid-cooled in-line 4-cylinder engine உள்ளது.
இந்த பைக்கில் கவாஸாகி டிராக்ஷன் கண்ட்ரோல் உடன் Riding mode-களையும் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |