2026: அள்ளித் தரப்போகும் சுப யோகங்கள் - 4 ராசிகளுக்கு ஜாக்பாட்
ஜனவரி 1, 2026 வியாழக்கிழமை, சுக்ல பக்ஷத்தின் (வளர்பிறை சந்திரன்) பதின்மூன்றாம் நாள். இந்த நாளில் மிருகசீரிஷ நட்சத்திரம் இருக்கும்.
இந்த நாளில் சுபமாகக் கருதப்படும் ரவி யோகமும் உருவாகிறது. ஜனவரி 2, 2026 வெள்ளிக்கிழமை குரு மற்றும் சந்திரனின் இணைவு ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான யோகமான கஜகேசரி யோகத்தை உருவாக்கும்.

ஐந்து முக்கிய கிரகங்கள் ஒரே ராசியில் இணையும்போது பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இதனால் 4 ராசிகளுக்கு அதிகமான நன்மைகள் நடக்கும்.
ரிஷபம்
பண வரவு கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்ய உகந்த நேரம் ஆகும். சமூகத்தில் உங்கள் கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியம் மேம்படும். சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கன்னி
தந்தை வழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஆன்மீகப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். கல்வி அல்லது வேலைக்காக மேற்கொண்ட முயற்சிகள் கைகூடும். தொழிலதிபர்களுக்கு திருப்புமுனையான ஆண்டாக அமையும்.

தனுசு
உடல் உபாதைகள் நீங்கும். எதிரிகளை வீழ்த்தும் தைரியம் பிறக்கும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும். சமூகத்தில் மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். திடீர் பண வரவு மற்றும் செல்வம் சேரும். உங்கள் பேச்சாற்றல் மேம்படும். மற்றவர்களை கவரும் திறன் உண்டாகும். அரசு மற்றும் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். வணிகத்தில் எதிர்பாராத வளர்ச்சி கிட்டும். புதிய வேலையைத் தொடங்க இது நல்ல நேரமாக விளங்கும்.