10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - எந்த மாவட்டம் முதலிடம்?

Tamil nadu
By Karthikraja May 20, 2026 05:31 AM GMT
Report

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 11 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. 

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - எந்த மாவட்டம் முதலிடம்? | 2026 Tamilnadu 10Th Exam Result Released

சுமார் 8.82 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இந்த தேர்வுக்கான முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதே போல் 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும். 

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது - எந்த மாவட்டம் முதலிடம்? | 2026 Tamilnadu 10Th Exam Result Released

மொத்தமாக 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.51% அதிகம் ஆகும். இதில் மாணவர்கள் 92.15% பேரும், மாணவிகள் 96.47% பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

97.57% உடன் புதுக்கோட்டை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 97.54 சதவீதத்துடன் சிவகங்கை 2வது இடத்திலும், 97.41 சதவீதத்துடன் தஞ்சாவூர் 3வது இடத்திலும், 97.40சதவீதத்துடன் திருச்சி 4வது இடத்திலும், 97.30 சதவீதத்துடன் கன்னியாகுமரி 5வது இடத்திலும் உள்ளது.

மொத்தம் 5171 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. அதில் 1931 அரசு பள்ளிகள் அரசு பள்ளிகள் ஆகும்.

தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மே 26 ஆம் தேதி முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 8 முதல் ஜூலை 15 வரை துணைத்தேர்வு நடைபெறும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US