லண்டனில் பட்டினியால் பரிதாபமாக இறந்த 20 மாத குழந்தை! இளம் தாயின் அஜாக்கிரதையால் நடந்த விபரீதம்
பிரித்தானியாவின் தலைநகரில் இளம் தாய் ஒருவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் எண்ணத்தில், 20 மாத குழந்தையை பலி கொடுத்துள்ள சம்பவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டனின் Brighton-ல் இருக்கும் முகவரியில்,Verphy Kudi’s என்பவரின் 20 மாத குழந்தை Asiah Kudi உயிரிழந்தார்.
இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், தற்போது 19 வயதாகும் Verphy Kudi’s தன்னுடைய 18 வயது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக வெளியில் சென்றுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய இவர், அதன் பின் 11-ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். அப்போது இவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், தன் குழந்தையை வீட்டின் உள்ளே வைத்துவிட்டு சென்றுள்ளார்.
Verphy Kudi’s புறப்படுவது மற்றும் வீட்டிற்கு திரும்பும் நாள் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது இவர் தன்னுடைய வீட்டிற்கு திரும்புவதற்கு முன்பு Coventry மற்றும் Solihull-ல் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தை கொண்டாடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இவர் வெளியில் இருந்த அந்த ஆறு நாட்களும் குழந்தை உள்ளே பசியால் தவித்து, நீரிழப்பு ஏற்பட்டு, இன்ப்ளூயன்ஸா நோய் ஏற்பட்டு பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று காலை லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணையில், அவர் அவர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அப்போது நீதிபதி, நான் உங்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பு, உங்களிடம் இருந்து ஒரு அறிக்கையை பெற விரும்புகிறேன்.
இதனால் உங்களை அடுத்த சில வாரங்கள் மருத்துவர்கள் வந்து சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை வரும் மே 28-ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தண்டனை அறிவிக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.