ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழப்பா? - உரிமையாளர் விளக்கம்
ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழந்ததாக பரவிய தகவல் குறித்து அதன் உரிமையாளர் விளக்கமளித்துள்ளார்.
ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இது உலகளவில் நடைபெறும் பெரிய கால்நடை கண்காட்சிகளில் ஒன்றாகும்.

அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். பல கோடிகளில் கால்நடைகள் விற்கப்படும்.
இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற்று வரும் புஷ்கர் கண்காட்சியில், ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
இந்த எருமைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக சமூகவலைத்தளங்களில் வீடியோக்கள் வைரலானது.
"எருமைக்கு அதிக ஆண்டிபயாடிக்குகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களை செலுத்துகிறார்கள், வணிகத்தின் பெயரால் விலங்குகளை துன்புறுத்துகிறார்கள்" என விலங்குநல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், ரூ.21 கோடி மதிப்பிலான எருமை உயிருடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், வேறு ஒரு எருமை இறந்ததை இந்த எருமை இறந்ததாக பலரும் தவறான தகவலை பரப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எங்கள் எருமைக்கு சற்று சோர்வு ஏற்பட்டத்தால் ஓய்வு எடுத்ததே தவிர, முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது என ரூ.21 கோடி மதிப்பிலான எருமையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். கால்நடைப்பராமரிப்பு துறையும் அந்த எருமை ஆரோக்கியமாக்க உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |