கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.., ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 பேர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான பஞ்சாப், அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சென்று விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், " கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது சோகமான நிகழ்வாகும். இதற்கு காரணமாக கொலையாளிகளை தப்ப விட மாட்டோம்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்" என்றார்.
கடந்த 2020 -ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 120 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |