214,000 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதித்த திட்டம்
Thousands of migrants have been let into the UK under a scheme that shut five years ago: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரெக்சிட்டுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானியாவில் வாழ அனுமதிப்பதற்காக, The EU Settlement Scheme என்னும் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அனுமதித்த திட்டம்
அந்த திட்டம், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது.

ஆனால், அதன்பிறகும், அத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதாவது, கால தாமதமாக வந்த விண்ணப்பங்கள் என்னும் பெயரில், 160,000 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 54,000 பேரை சேர்த்து, முடிவடைந்த The EU Settlement Scheme திட்டத்தின் கீழ், 214,000 பேர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், அந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும், உள்துறை அலுவலகம் தூங்கிக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Neil O'Brien என்பவர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தவர்களின் கணவன் அல்லது மனைவி என்னும் பெயரில் பிரித்தானியா வர விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஏன் உள்துறை அலுவலகம் இன்னமும் ஏற்கிறது என்பதற்கு அமைச்சர்கள் பதிலளித்தாகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |