பிரித்தானியாவில் இதற்கு விரைவில் தடை! அதிகம் பாதிக்கப்படும் இளைஞர்கள்: வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் 21 வயதிற்குட்பட்டவர்கள் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்தது.
குறிப்பாக இதில் இளைஞர்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இதில் சிகரெட்டை தொடர்ந்து, சுவை தன்மையுடன் இருக்கும் இ சிகரெட்டுகளை தடை செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில், பிரித்தானியாவில் சுமார் 6 மில்லியன் மக்கள் இப்போது வரை புகைப்பிடிக்கின்றனர், இதில் 18 முதல் 21 வயதிற்குட்பட்டவர்களே அதிகம். இதற்கிடையில் அமைச்சர்கள் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் புகை இல்லாத பிரித்தானியாவை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இந்த தடை கொண்டு வருவதன் மூலம், 5 சதவீதம் அல்லது அதற்கு குறைவானவே புகைபிடிப்பார்கள், அதற்கு ஏற்ற வகையில், புதிய நடவடிக்கைகள் வெளிவரவதாக கூறப்படுகிறது.
இந்த புதிய நடவடிக்கைகள் குறிப்பாக, இளம் வயது புகைப்பிடிப்பவர்களை ஒடுக்கும் நோகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருக்கும் 2000 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 18-21 வயது கொண்ட நபர்களே அதிகம் புகைப்பிடிப்பதை காண முடிகிறது.
20 சதவீதம் பேர் இப்போது புகைப்பிடிப்பதாக கூறியுள்ளனர். அதுவே இந்த கொரோனா பரவலுக்கு முன் 16.7 சதவீதமாக இருந்தது. தற்போது பிரித்தானியாவில் சிகரெட் வாங்குவதற்கான சட்டபூர்வமான வயது 18 என்றாலும், இதை அதிகரிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை உள்ளது.
ஏனெனில் தற்போதைய சட்டம் இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பிடிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், புகைபிடித்தல் ஆயுளைக் குறைக்கிறது. 2030 க்குள் நாட்டை புகை இல்லாத நாடாக மாற்ற நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற அதற்கான திட்டத்தை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, உலகசுகாதார அமைப்பு, இ-சிகரெட்டுகள் தீங்கு விளைவிக்கும், இதனால் இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.