பிரித்தானியாவில் 22 அங்குல ராட்சத எலி கண்டுபிடிப்பு: பொதுமக்களிடம் அதிகரிக்கும் கவலை!
பிரித்தானியாவில் உள்ள குடியிருப்பு வீட்டில் 22 அங்குல ராட்சத எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் ராட்சத எலி
நார்த் யார்கூஷரின் ரெட்கார் மற்றும் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள நார்மன்யி குடியிருப்புவாசிகள் ஒருவரின் வீட்டில் இருந்து 22 அங்குல ராட்சத எலி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூனை அளவுக்கு இருந்த ராட்சத எலியானது பூச்சு கட்டுப்பாட்டு பணியாளர் ஒருவரால் பார்க்கப்பட்டு பின்னர் பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படத்தை உள்ளூர் கவுன்சிலர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைரலானதை தொடர்ந்து, தனிப்பட்ட சம்பவம் தற்போது சுற்றியுள்ள இடங்களின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
எஸ்டன் பகுதி கவுன்சிலர்களான டேவிட் டெய்லர் மற்றும் ஸ்டீபன் மார்ட்டின் பகிர்ந்த புகைப்படத்தில், பெரிய பிளாஸ்டிக் பையில் ராட்சத எலி ஒன்று கவனமாக அடைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
இதையடுத்து, பலர் ராட்சத அளவிலான எலிகளை கண்டதாக கூறும் பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பொதுமக்களிடம் அதிகரிக்கும் கவலை
இந்நிலையில், பொதுமக்களிடம் பாதுகாப்பு அச்சுறுத்தல், நோய் பரவல் பாதிப்புகள் மற்றும் சொத்து சேதாரங்கள் குறித்த கவலை அதிகரித்துள்ளது.
மேலும், அதிகாரிகளிடம் புதர்களை அகற்றுதல், குப்பைகளை கையாடலை மேம்படுத்துதல் மற்றும் பூச்சு கட்டுப்பாட்டு சேவையை மீண்டும் தொடங்குதல் ஆகியவற்றை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் எலிகளின் நடமாட்டத்திற்கு கழிவு மேலாண்மை, பராமரிக்கப்படாத பொது இடங்கள் போன்ற பல காரணங்கள் இருப்பதாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |