இலங்கையில் அதிகளவில் பதிவான கற்பழிப்பு வழக்குகள்: நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
இலங்கையில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்குள் 168 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கற்பழிப்பு வழக்குகள்
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்களில் 22 பேர் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 11,000 சிறுவர்கள் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் குறைந்தது 41% பாலியல் துஷ்பிரயோகத்தின் கீழ் வருகின்றன.
மேலும் இந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, அது ஒரு அதிகரிப்பை காட்டுகிறது என்று எரான் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |