காதலன் மீது பெட்ரோல் ஊற்றிய காதலி..இருவரும் உயிரிழந்த பரிதாபம்
தமிழக மாவட்டம் மயிலாடுதுறையில் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட காதலன் இறந்த நிலையில், சிகிச்சையில் இருந்த காதலியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (24). இவரும் கடலூரைச் சேர்ந்த சிந்துஜா (22) என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.
ஆனால், ஆகாஷ் வேறொரு பெண்ணுடன் பழகியதால் சிந்துஜாவை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி பூம்புகார் கடற்கரையில் ஆகாஷ் தனது காதலி சிந்துஜாவை சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் மயிலாடுதுறை காவிரி பாலக்கரை எனும் இடத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது சிந்துஜாவை காதலிக்க ஆகாஷ் மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இருவரும் தீப்பற்றியதில் உயிருக்குப் போராடியுள்ளனர். இதனையடுத்து இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் 14ஆம் திகதி உயிரிழந்தார். இதனால் சிந்துஜா மீது கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிந்துஜாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |