ரூ.65 கோடிக்கு கன்னித்தன்மையை ஏலத்தில் விற்ற பிரித்தானிய மாணவி
பிரித்தானியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ரூ.65 கோடிக்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி லாரா (Laura), தனது கன்னித்தன்மையை £1.7 மில்லியனுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.65 கோடி) விற்ற சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.
ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் இவ்விபரீதமான ஏலத்தில் மிக உயர்ந்த தொகையை வழங்கி அதைப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலம் மற்றும் முடிவெடுக்கும் காரணம்
இந்த ஏலத்தை ஒரு பிரபலமான எஸ்கார்ட் நிறுவனம் ஏற்பாடு செய்தது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.
இறுதியில், ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் அதிகபட்ச தொகையை செலுத்தியதன் மூலம் இந்த ஏலம் முடிவுக்கு வந்தது.
தனது செயலை நியாப்படுத்தும் லாரா, “இதற்காக நான் எந்த வருத்தமும் படவில்லை. நிறைய பெண்கள் எந்தவித பயனும் இன்றி தனது கன்னித்தன்மையை இழக்கிறார்கள். ஆனால் நான் குறைந்த பட்சம் என் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொண்டேன்” என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.
"எனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதற்கான எனது முடிவை நிதி சுதந்திரத்தைப் பெறுவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக நான் கருதுகிறேன்" என்று லாரா குறிப்பிட்டள்ளார்.
உடல் சோதனை மற்றும் ஒப்பந்தம்
இந்த ஏலம் முடிந்த பின்பு, கைப்பற்றிய நபரின் முன்னிலையில் லாராவின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகிரங்க ஏலம் அதிக ரகசியத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டது.
சமூக விவாதம்
இந்த சம்பவம் கற்பு, சமூக பார்வை, பெண்களின் தனிப்பட்ட உரிமை போன்ற விடயங்களைப் பற்றி பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. சிலர் லாராவின் முடிவை ஆதரிக்க, இன்னொருபுறம் பலர் இதை முறைகேடான சமூக மாற்றம் என கண்டித்துள்ளனர்.
லாரா, பெற்ற பணத்தை வளமான வாழ்க்கை அமைத்துக்கொள்ளவும், தனது கனவுகளை நிதி ரீதியாக எவ்வித சிக்கலுமின்றி அடைவதற்கும் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Laura, Virginity, UK student sells her virginity