லண்டனில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம்: 22 வயது இளைஞருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்
பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இளைஞருக்கு கத்திக்குத்து
பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் நடந்த கத்திக்குத்தில் 22 வயது இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
பிரிக்ஸ்டனில் உள்ள கோல்ட்ஹார்பர் லேனுக்கு(Coldharbour Lane) மாலை 4.45 மணிக்கு முன்னதாக கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
MyLondon
சம்பவ இடத்திற்கு பொலிஸாருடன் விரைந்த அவசர ஆம்புலன்ஸ் பிரிவினர் கத்திக்குத்து காயத்துடன் இருந்த இளைஞரை கண்டுபிடித்தனர்.
ஆனால் தீவிர காயம் காரணமாக 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
பொலிஸார் விசாரணை
இதையடுத்து மெட் பொலிஸார் கொலை விசாரணை தொடங்கியுள்ளனர், மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Getty
சம்பவம் நடைபெற்ற இடம் முழுவதும் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது, சாட்சிகள் யாரேனும் இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உயிரிழந்த குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பிரிவினர் ஆறுதல் வழங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |