பிரித்தானியாவில் 22,000 டன் குப்பைகள் அகற்றம்: செலவு செய்யப்பட்ட 6 மில்லியன் பவுண்டுகள்
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயர் சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
22,000 டன் குப்பைகள் அகற்றம்
ஆக்ஸ்போர்ட்ஷயர்(Oxfordshire) கிட்லிங்டன்(Kidlington) பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
அரசின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 22,000 டன்னுக்கு அதிகமான வணிக மற்றும் வீட்டுக் கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.

A34 நெடுஞ்சாலையை ஒட்டியும், Cherwell நதியின் கரையோரமாக அமைந்திருந்த 3 ஏக்கர் நிலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய குப்பை மலையாக உருவெடுத்து இருந்தது.
செயற்கைகோள் புகைப்படங்கள் படி, இந்த இடம் 150 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட குப்பை குவியலாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.
துப்புரவு பணிகள்
கிட்டத்தட்ட வெம்ப்லி மைதானத்தை விட மிகப்பெரிய அளவில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற 30 லொறி லோடு குப்பைகள் தினமும் வெளியேற்றப்பட்டன.

இந்த சுத்திகரிப்பு திட்டத்திற்காக சுற்றுச்சூழல் முகமை கிட்டத்தட்ட 6 மில்லியன் பவுண்டுகளை செலவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக கண்டறியப்படும் நபர்களிடம் இருந்து இந்த தொகை மீண்டும் வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதியில் குப்பை கொட்டியதுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |