35 வயதுக்குள் இத்தனை கோடி சேமிக்க வேண்டும்: 22 வயது கூகுள் ஊழியரின் ஓய்வு திட்டம்
கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய 35வது வயதில் 41 கோடி ரூபாய் சேமிப்புடன் ஓய்வு பெறும் திட்டத்தை வைத்துள்ளார்.
கூகுள் நிறுவன பணியாளர்கள் ஊதியம்
கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே தங்களிடம் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகிறது, அதே சமயம் கூகுள் நிறுவனம் தங்களிடம் பணி புரியும் ஊழியர்களுக்கான சலுகைகளிலும், ஊதியத்திலும் எப்போதும் சமரசம் செய்து கொண்டது இல்லை.
2022ம் ஆண்டில் கூகுள் நிறுவன பணியாளரின் சராசரி ஆண்டு ஊதியம் 2,79,802 டொலர்கள் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு 2.30 கோடி அதிலும் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் ஊழியர்களின் ஆண்டு வருமானம் 7,18,000 டொலர்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் சிஎன்பிசி அறிக்கையின் படி, கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய 35வது வயதில் 41 கோடி ரூபாய் சேமிப்புடன் பணியில் இருந்து ஓய்வு பெறும் திட்டத்தை வைத்து இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
35 வயதில் ஓய்வு
முதலீடுகளில் அதிக ஆர்வம் கொண்ட அமெரிக்காவை சேர்ந்த 22 வயது இளைஞர் ஈத்தன் கவுன்லி தற்போதே ஓய்வு காலத்திற்காக சுமார் 1,35,000 டொலர்கள் முதலீடு செய்து வைத்துள்ளார்.
CNBC
ஃப்ளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் சொந்தமாக வீடு வைத்து இருக்கும் இவருக்கு சிறுவயது முதலே அவரது பெற்றோர்கள் முதலீடு குறித்த முக்கியத்துவத்தை சொல்லி கொடுத்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இவருக்கு இன்றைய திகதியில் ஆண்டு ஊதியமானது 1,94,000 அமெரிக்க டொலர், (அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.60 கோடி) இதில் அடிப்படை ஊதியமாக 1,34,000 டொலர்கள் வழங்கப்படுகிறது.
cfr.org
இவை போக ஆண்டுக்கு 15% போனஸும் வழங்கப்படுகிறது. தன்னுடைய வாழ்வில் 35 வயதில் ஓய்வு பெற்று விட வேண்டும் என்றும், அதற்குள் 5 மில்லியன் டொலர்கள் சேமித்து வைத்து இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூகுள் நிறுவனத்தில் பணி புரிவது என்பது வாழ்நாள் கனவு என்றும், கூகுள் நிறுவனம் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |