ஏரியில் மாயமனவரை தேடும் சுவிஸ் உட்பட 3 நாடுகளின் பொலிஸ்
ஐரோப்பாவின் பிரபலமான ஏரியில் மாயமான ஒருவரை 23 படகுகளில் சுவிஸ் உட்பட மூன்று நாடுகளின் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை Constance ஏரியில் தனியாக படகு சவாரிக்கு சென்றுள்ளார் 60 வயதான அந்த நபர். ஆனால் திடீரென்று அவரது குடும்பத்தினரின் பார்வையில் இருந்து விலகிச் சென்றதை அடுத்து, அவர்கள் உள்ளூர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, சுவிஸ் பொலிசார், ஆஸ்திரியா மற்றும் பவேரியன் என 23 படகுகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
மட்டுமின்றி ஹெலிகொப்டர் வசதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் சுவிட்சர்லாந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையேயான பகுதியில் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலந்து நாட்டவரான அந்த 60 வயது நபர் தமது குடும்பத்தினருடன் ஜேர்மனிக்கு வருகை தந்த போது, ஞாயிறன்று திடீரென்று தனியாக படகு சவாரி மேற்கொண்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது மனைவியும் மகனும் கரையில் காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் கரைக்கு திரும்பாதது கண்டு இரவு 9.30 மணியளவில் அந்த நபரின் மகன் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தொடர்ந்து 10.30 மணியளவில் Constance ஏரியில் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து 23 படகுகளில் சிறப்பு பொலிசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த நபர் சென்ற படகு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
3 மணியளவில் தேடுதல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து திங்கட்கிழமை பகல் ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.