சுவிட்சர்லாந்தில் பிடிபட்ட வேனுக்குள் இருந்த 23 புலம்பெயர்ந்தோர்... எந்த நாட்டவர்கள் தெரியுமா?
சுவிட்சர்லாந்தில் வாகன சோதனையின்போது பிடிபட்ட வேன் ஒன்றிற்குள் 23 புலம்பெயர்வோர் இருந்தது தெரியவந்தது.
அவர்களை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் வாகன சோதனையின்போது வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட பொலிசார், அந்த வேனுக்குள் 23 புலம்பெயர்வோர் அடைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
திங்கட்கிழமை காலை Lucerne நகரில் பொலிசார் அந்த வேனை சோதனையிட்டார்கள்.
அந்த வேனில் சரக்குகள் வைக்கும் இடத்தில் 23 புலம்பெயர்வோர் ஜன்னல் கூட இல்லாத நிலையில் நெருக்கியடித்துகொண்டு நின்றுகொண்டிருந்திருப்பதை பொலிசார் கண்டுள்ளனர்.
அவர்கள் பல மணி நேரமாக அந்த வேனுக்குள் அடைக்கப்பட்டிருந்தததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Copyright Kantonspolizei Nidwalden
அந்த புலம்பெயர்வோர், 20 முதல் 50 வயதுடையவர்கள், ஆப்கானிஸ்தான், இந்தியா, சிரியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக அந்த வேனில் பயணித்துள்ளார்கள்.
Gambia நாட்டவரும் இத்தாலியில் வாழ்பவருமான அந்த வேனின் சாரதியாகிய 27 வயது நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசார் அவரிடம் மனிதக் கடத்தல் செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.