மைதானத்தில் தாக்கிக்கொண்ட வீரர்கள் - ஒரே போட்டியில் 23 வீரர்களுக்கு ரெட் கார்டு
கால்பந்து போட்டியின் போது வீரர்கள் மோதிக்கொண்டதால் ஒரே போட்டியில் 23 வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
கால்பந்து மைதானத்தில் கடும் மோதல்
பிரான்சில் Cruzeiro மற்றும் Atletico Mineiro அணிகளுக்கு இடையேயான காம்பியோனாடோ மினிரோ கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது.

பெலோ ஹொரிசாண்டேயில் நடைபெற்ற இந்த போட்டியில், க்ரூஸீரோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், க்ரூஸீரோவின் மிட்ஃபீல்டர் கிறிஸ்டியன் கோல் போட முயற்சிக்கும் போது கீழே விழுந்து விட, மினிரோ கோல்கீப்பர் எவர்சன் அதனை தடுத்து, வேண்டுமென்றே தனது கால் முட்டியால் கிறிஸ்டியனின் முகத்தில் இடிப்பார்.
SCENES: Chaos broke out earlier today when a Cruizero player ran into the Athletico Minero goalkeeper during a Brazilian league game earlier today.
— Man of Letters. (@Letter_to_Jack) March 9, 2026
pic.twitter.com/j7YRBSJ8Nr
இதனை தொடர்ந்து இரு அணி வீரர்களும் மைதானத்தில் கடுமையாக தாக்கி கொண்டனர்.
23 வீரர்களுக்கு ரெட் கார்டு
இதனை தொடர்ந்து, இந்த போட்டியில் 23 வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
பிரான்சில் இதுவே அதிக வீரர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்ட போட்டி ஆகும்.
முன்னதாக, 1954 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் 22 ரெட் கார்டு வழங்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |