ஐபிஎல் மெகா ஏலத்திற்கு 23 இலங்கை வீரர்கள் தேர்வு! யாருக்கு எவ்வளவு விலை?
2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க 23 இலங்கை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2022 ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் மொத்தம் 370 இந்தியர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் இருக்கிறார்கள். 220 வெளிநாட்டு வீரர்களில் 23 இலங்கை வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
19 வயதுக்குட்பட்ட இலங்க அணித் தலைவர் துனித் வெல்லலகேவும் ஏலத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடிய வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இம்முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோரும் ஏலத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் மற்றும் அவர்களின் அடிப்படை விலையின் முழுமையான பட்டியல்:
- வனிந்து ஹசரங்க - இந்திய ரூபாய் 1 கோடி
- துஷ்மந்த சமீர - இந்திய ரூபாய் 50 லட்சம்
- பானுகா ராஜபக்சே - இந்திய ரூபாய் 50 லட்சம்
- குசல் பெரேரா - இந்திய ரூபாய் 50 லட்சம்
- குசல் மெண்டிஸ் - இந்திய ரூபாய் 50 லட்சம்
- நிரோஷன் டிக்வெல்லா - இந்திய ரூபாய் 50 லட்சம்
- மகேஷ் தீக்ஷனா - இந்திய ரூபாய் 50 லட்சம்
- மதீஷ பத்திரன - இந்திய ரூபாய் 20 லட்சம்
- சரித் அசலங்கா - இந்திய ரூபாய் 50 லட்சம்
- அகில தனஞ்சய - இந்திய ரூபாய் 50 லட்சம்
- அவிஷ்கா பெர்னாண்டோ - இந்திய ரூபாய் 50 லட்சம்
- பதும் நிஸ்ஸங்க - இந்திய ரூபாய் 50 லட்சம்
- சாமிக்க கருணாரத்ன - இந்திய ரூபா 50 லட்சம்
- தசுன் ஷனகா - இந்திய ரூபாய் 50 லட்சம்
- கெவின் கொத்திகொட - இந்திய ரூபாய் 20 லட்சம்
- திசர பெரேரா - இந்திய ரூபாய் 50 லட்சம்
- லஹிரு குமார - இந்திய ரூபாய் 50 லட்சம்
- இசுரு உதானா - இந்திய ரூபாய் 50 லட்சம்
- நுவன் துஷாரா - இந்திய ரூபாய் 20 லட்சம்
- தனுஷ்கா குணதிலக - இந்திய ரூபாய் 50 லட்சம்
- சீக்குகே பிரசன்னா - இந்திய ரூபாய் 50 லட்சம்
- தனஞ்சய லக்ஷன் - இந்திய ரூபாய் 50 லட்சம்
- துனித் வெல்லலகே - இந்திய ரூபாய் 20 லட்சம்