காதல் திருமணம் செய்த ஓர் ஆண்டில் இளம்பெண் தற்கொலை
தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் இளம்பெண்ணொருவர் திருமணமான ஓர் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் முகமது. இவரும் கவிதா (23) என்ற பெண்ணும் ஓர் ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்குள்ளும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் கவிதா மனமுடைந்து காணப்பட்ட நிலையை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
File Photo
பொலிஸார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் கவிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் திருமணமான ஓர் ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Getty Images/iStockphoto
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |